Monday 29 April 2019

உலகில் மிக மோசமான உடலமைப்பு குறைபாடுகளுடன் வாழ்ந்து வரும் மக்கள்-1


உலகில் மிக மோசமான உடலமைப்பு குறைபாடுகளுடன் வாழ்ந்து வரும் மக்கள் 

இந்த பதிவை மூன்று தொகுப்பாக பதிவிட இருக்கிறேன்.....இது முதல் தொகுப்பு..

கீழே வரும் புகைப்படங்கள் கொஞ்சம் அருவருப்பாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கிறேன்....

சிலர் மிக உயரமாக இருப்பார்கள், சிலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள், சிலருக்கு மூக்கு மட்டும் மிக பெரிதாக இருக்கும். சிலர் இதழ்கள் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இதை எல்லாம் உடலில் காணப்படும் வித்தியாசமான தோற்றம் என்று கூறுவீர்களா?
ஒருவேளை உடலில் பதினாறு கைவிரல்கள், பதினெட்டு கால் விரல்கள் இருந்தால், கண்களுக்குள் முடி முளைத்தால், கால்கள் மட்டும் யானை போல இருந்தால், மூக்கே இல்லாமல் இருந்தால். முகம் முழுக்க ஓநாய் போல முடி முளைத்தால், இருபது வயது இளைஞர் நூறு வயது முதியவர் போல தோற்றம் அளித்தால் என்ன கூறுவீர்கள்?
இதோ! உலகின் உடல் அமைப்பு கோளாறுடன் பிறந்து, வாழ்ந்து, மடிந்த சில வித்தியாசமான மனிதர்கள்...

உல்லாஸ் குடும்பம்




உல்லாஸ் குடும்பம் (The Ulaş Family), இவர்கள் துருக்கியில் ஒரு கிராமப்புறத்தில் வாழ்ந்து வரும் குடும்பத்தினர். இவர்கள் குடும்பத்தில் மட்டுமே இந்த விசித்திர கண்டிப்பிடிக்கப்படாத குறைபாடு காணப்படுகிறது. இவர்களால் மற்ற மனிதர்களை போல இரண்டு கால்களில் நடக்க முடிவதில்லை. நான்கு கால்களில் தவழ்ந்து தான் செல்கின்றனர். இவர்களது உடல் முழுமையான வளர்ச்சி அடைவதில்லை. இவர்கள் உடலமைப்பு பழங்கால குரங்கு இனத்தின் அமைப்பினை போல இருக்கிறது என கூறுகிறார்கள்.
ஆராய்ச்சியார்கள் இதுவரை இவர்களது குறைபாடு குறித்து தெளிவான காரணம் அறிய முடியாமல் தவித்து வருகிறார்கள். இது ஒருவகையான மரபணு கோளாறாக இருக்க கூடும் என்பது மட்டுமே அறிய முடிகிறது.

தி ஆசிவ்ஸ் குடும்பம்


தி ஆசிவ்ஸ் குடும்பம் (The Aceves Family), இவர்கள் மெக்ஸிகோவில் வசித்து வந்த குடும்பம். இவர்களுக்கு ஆங்கிலத்தில் Hypertrichosis என அறியப்படும் மயிர்மிகைப்பு கோளாறு இருந்து வந்தது. இதை ஓநாய் நோய் எண்டும் குறிப்பிடுவது வழக்கம். அதாவது முகத்திலும், உடலின் சில பகுதிகளிலும் மிகையாக மயிர் வளர்ச்சி இருக்கும்.

ஜோஸ் மெஸ்ட்ரே


ஜோஸ் மெஸ்ட்ரே (José Mestre), போர்ச்சுகீசிய பிரஜை ஆவார். இவர் முகத்தில் பெரிய அளவிலான கட்டி ஒன்று உருவானது. அந்த கட்டி இவரது முகத்தையே முழுவதுமாக மறைத்துவிட்டது. இவரால் சுவாசிப்பது கடினாமா செயலாகும். சிக்காகோவில் இருந்து மருத்துவர் ஒருவர் கடைசியில் இவருக்கு உதவ வந்தார். ஆனாலும், இந்த அறுவை சிகிச்சை மிகவும் கடினமானது என்று கூறினார். பிறகு போர்ச்சுகீசிய அரசே ஜோஸ் மெஸ்ட்ரேவின் அறுவை சிகிச்சை தொகையை அளிப்பதாக கூறியது. இப்போது மருத்துவ சிகிச்சைகள் பெற்று ஒரு இயல்பான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜோஸ் மெஸ்ட்ரே.

காதுக்குள் கொம்பு!


சில சமயம் தலையோடு தலை முட்டிக் கொண்டால், பொய் கூறினால் கொம்பு முளைக்கும் என்று கூறுவோம். ஆனால், இந்த நபருக்கு உண்மையாகவே காதுக்கு அருகாமையில் கொம்பு முளைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆட்டு கொம்பு போல கடினமானதாக இது இருந்துள்ளது. எப்படியோ அறுவை சிகிச்சை செய்து இதை அகற்றிவிட்டார்கள்.

விரல்!


2007ல் ABC செய்தி தொகுப்பு ஒன்றில் டிவி தொகுப்பாளினி ஒருவர் Ectrodactyly எனும் பாதிப்புடன் வாழ்ந்து வருவது கூறப்பட்டிருந்தது. இந்த நோயை ஆட்டுக்குட்டி கைவிரல் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதாவது இவர்களது கை அல்லது கால் விரல்கள் ஆட்டின் விரல்கள் போல இருக்கும்.

ஜாவியர் போடெட்


ஜாவியர் போடெட் (Javier Botet) எனும் இந்த ஸ்பானிஷ் நடிகருக்கு மார்பன் நோய்க்குறி (Marfan Syndrome) என்ற ஒன்று இருக்கிறது. இந்த காரணத்தால் எழுந்து நீளமாக வளரும். மேலும், மூட்டு எலும்புகள் வலுவிழந்து லூசாக இருக்கும். இந்த குறைபாடு இருக்கும் ஆண்கள் உயரமாகவும், நீண்ட கை, கால்கள், விரல்களும் கொண்டிருப்பார்கள்.

பீட்டோ பைக்கடந்தா


பீட்டோ பைக்கடந்தா (Petero Byakatonda), உகாண்டாவின் சிறு நகர்புறத்தை சேர்ந்த சிறுவன். இவனுக்கு crouzon எனும் நோய் இருந்தது. இந்த நோய் மண்டை ஓட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விழிகளை வெளியே தள்ளும். இந்த சிறுவனுக்கு டெக்சாஸ் பகுதியை சேர்ந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்கு திரும்ப செய்தனர்.

ரூடி சாண்டோஸ்


ரூடி சாண்டோஸ் (Rudy Santos) எனும் இவர் கருவில் வளரும் போதே இரட்டையராக இருந்துள்ளார். ஆனால், இவரது இரட்டையர் இவரது உடலுடன் முழு வளர்ச்சி அடையாமல் பிறந்தார். இதனால், ஒட்டுண்ணி இரட்டையர் வகையில் இணைந்தார் இவர். இவரது உடலில் இருக்கும் கூடுதல் கைகளும், கால்களும் உயிருடன் தான் இருக்கும். ஆனால், அதனால் எந்த பயனும் இருக்காது.