Friday 7 June 2019

வித்தியாசமான காரணத்தால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்!!!


பிரபலமான ஊர்களின் பழைய பெயர்கள்!!!!


ஏர்க்காடு

காடும் ஏரியும் அமைந்திருந்த பகுதியை ஏரிகாடு என்று பெயர்வைத்தார்கள்அது சிதைந்து ஏர்க்காடு என மாறிவிட்டது.

திருநெல்வேலி

நெல்லுக்கு வேலியிட்ட கதையின் நினைவாகவே, திருநெல்வேலிக்கு அந்த பெயர் வந்ததாம்.

பாளையங்கோட்டை

பாளையக்காரர் ஒருவரின் கோட்டை அந்தப்பகுதியில் இருந்ததால் அந்தப்பகுதிக்கு  பாளையங்கோட்டை என்று பெயர் வந்திருக்கிறது.

குற்றாலம்

குற்றால நாதரும், குழலாள்மணி அம்மையும் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ஊர் குற்றாலம் என்று சொல்லிவிட்டார்கள். 

செங்கோட்டை 

செம்மையான கோட்டை அமைந்த இடத்திற்கு செங்கோட்டை என்று பெயர் சூட்டிவிட்டனர்.

தேன்பொத்தை

தேன்கூடுகள் அதிகம் இருக்கும் பொத்தை (சிறிய மலை) உள்ள ஊர் தேன்பொத்தை என்று சொல்கின்றனர். 

பைம்பொழில்

பசுமையான சோலைகள் அமைந்திருந்த பகுதியை பைம்பொழில் என்று பெயர் சூட்டினார்கள் அந்த கால மக்கள்.

தென்கரை

ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்த பகுதிக்கு தென்கரை என்று பெயர் வைத்தனர். 

வடகரை

ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த பகுதிக்கு வடகரை என்று பெயர் வைத்தனர்.

அடைக்கலப்பட்டிணம்

ஜாதி மோதல் வந்த காலத்தில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்தினால் அந்த ஊருக்கு அடைக்கலபட்டணம் என்று சூட்டினார்கள்.

உள்ளாறு

இரண்டு பிரிவாகச் செல்லும் ஆற்றின் நடுவே அமைந்திருக்கும் ஊருக்கு உள்ளாறு என்ன்று பெயர் வைத்தனர்

ஆற்றுவழி

ஆற்றின் போக்கில் (வழியில்) அமைந்த பகுதிக்கு ஆற்றுவழி என்று பெயர் வைத்தனர்.

குத்துக்கல் வலசை

குத்துக்கல் போன்ற அமைப்பிலான கற்கள் அதிகமாக காணப்படும் பகுதியைகுத்துக்கல் வலசை என்று பெயர் வைத்து அழைத்தனர் அப்பகுதி மக்கள். 

அம்மையப்பபுரம்

அம்மா ஆகவும் அப்பா ஆகவும் இறைவனே பாதுகாக்கும் பகுதியை (
அம்மையாய் அப்பனாய் இறைவன் வீற்றிருக்கும் ) அம்மையப்பபுரம் என்று அழைத்தனர் அப்பகுதி மக்கள்.

திருமலைக்கோயில்

அழகான மலையின்மேல் கோயில் இருந்த காரணத்தினாலர் அந்த  ஊருக்கு திருமலைக்கோயில் என்று பெயர். 

அச்சன்புதூர்

தந்தை (அச்சன்) ஸ்தானத்தில் உள்ள போர்வீரன் ஒருவரின் நினைவாகத் அந்தப்பகுதிக்கு அச்சன்புதூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

வாளேந்தி ரஸ்த்தா

வாள் ஏந்திப் போர் செய்து வெற்றி பெற்றதன் காரணமாக ஒரு ஊருக்கு  வாளேந்தி ரஸ்த்தா என்று நம்முன்னோர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.

கட்டளையூர்

குறுநில மன்னர்கள் கட்டளையாக (தானமாக) தந்த பகுதியின் பெயர் கட்டளையூர் என்பதாகும். 

பனையூர்

பனைகள் அதிகம் இருக்கக்கூடிய ஊர் பனையூர். 

கரிசலூர்

கரிசல்மண் அதிகமாக இருக்கும் ஊர் கரிசலூர். 

பொட்டல்புதூர்

காலியாக பொட்டலான இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அமைக்கப்பட்ட ஊருக்கு பொட்டல்புதூர் என்று பெயர்.

இடையர்தவணை

இடையர் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய ஊர் இடையர்தவணை என்று அழைத்தார்கள். 

ரெட்டியார்பட்டி

ரெட்டியார் என்ற ஜாதியைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர் ரெட்டியார்பட்டி என்று சொன்னார்கள்

தேவர்குளம்

தேவர் இனமக்கள் அதிகமாக வசிக்கும் ஊர் தேவர்குளம் எனப்பட்டது.

அணைந்த நாடார் பட்டி

நாடார் சமுதாய மக்கள்  அதிகமாக வசிக்கும் ஊரின் பெயர் அணைந்தநாடார்பட்டி என்பதாகும்.

நெல்கட்டும்செவல்

நெல் அதிகமாக விளையக்கூடிய செவக்காட்டு நிலம் பகுதிக்கு நெல்கட்டும்செவல் என்று பெயர் வைத்தார்கள்..

உங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்யவும்........

Sunday 2 June 2019

இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா????(Bit Coins)



பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?


இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற வி ஷ யம் நம் முன் உள்ளது . பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.

பொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.
தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 9,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களை கடப்பதற்கு அது ஒரு சில நாட்களையே எடுத்துக்கொண்டது. சமீத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.

பிட்காயின் என்றால் என்ன?

இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. அப்படி பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது ஒப்பீட்டளவில் அறியப்படாத ஒன்றாகும். ஆனால், bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.
சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் சுவாரசியமானது.
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.

திடீர் உயர்வுக்கு காரணமென்ன?

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.
இம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
தற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்
ஆனால், இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஏற்றம் நிலையானதா?

தற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.
மேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.
பிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.
பிட்காயின் வர்த்தகத்தின் பலன்கள்:

மிகவும் வசதியானது. பிட்காயின் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்யலாம். விடுமுறைகள் கிடையாது. இதில் வங்கிகளுக்கோ, பணியாளர்களுக்கோ தேவையில்லை. எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறையும்கூட.

இதன் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையேயோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் ஒரு அமைப்பு இல்லை. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமோ இல்லை.

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பல மத்திய வங்கிகள் பிட்காயின் வாயிலாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில், பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான 'பிளாக்செயின்" பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதே காரணமாகும். ஆனால், பிட்காயின்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றத்திற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கிரடிட் கார்டு போன்றவை தேவையில்லை.

கணக்கு வைத்திருப்பவரின் தகவலும் மற்றும் அக்கணக்கு சார்ந்த தகவல்களும் ரசியமாகவும், மறையாக்கம் (என்க்ரிப்ட்) செய்யப்பட்டும் பாதுகாக்கப்படும்.

பிட்காயினில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன?

பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோககரமானது. ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாக பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரென்றே தெரியாத வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010யில் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர்கள்தான். அதன் பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.
சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளது தெரியும்.
"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை," என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது