Sunday 3 February 2019

மண்டையை குழப்பும் விண்வெளி மர்மங்களும், விசித்திரமான சப்தங்களும்..!(Mystery Of Space)


கடந்த நூற்றாண்டில் மனித இனம் எதையெல்லாம் சாதிக்க முடியவில்லையோ, அதையெல்லாம் இந்த நூற்றாண்டு மனித இனம் சாதித்தது. அவ்வாறே இந்த நூற்றாண்டில் மனித இனம் தவற விடுவதை அடுத்துவரும் தலைமுறை மக்கள் சாதிப்பார்கள் – இதைத்தான் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பார்கள்..!

அப்படியான வளர்ச்சியானது பூமியையே சுருக்கும் அளவு வளர்ந்தாலும் கூட, பூமியை உள்ளடக்கிய அண்டம் சார்ந்த பல மர்மங்களை அறிந்து கொள்ளாமலே இருக்கிறது என்பது தான் நிதர்சனம். அறிந்து கொள்ளவில்லை என்று கூறுவதை விட அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறலாம்.
அப்படியாக விண்வெளி ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்த விஞ்ஞானிகளுக்கே சிம்மப்சொப்பனமாய் விளங்கும் ‘விண்வெளி மர்மங்கள்’ பல உள்ளன. அவைகளில் மிகவும் மர்மமானவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன..!

மர்மம் 01 :


ஸீரஸ் (Ceres) கிரக்தில் உள்ள பிரகாசமான மர்ம புள்ளிகள்.
குள்ளமான கிரகம் :
மிகவும் சிறிய கிரங்களை ட்வார்ஃப் பிளானட் (dwarf planet) என்பார்கள், அதாவது குள்ளமான கிரகம்..!
சுற்று வட்டப்பாதை :
ஸீரஸ் கிரகம் ஒரு ‘ட்வார்ஃப் பிளானட்’ என்பதோடு, செவ்வாய் மற்றும் வியாழன் கிரக சுற்று வட்டப்பாதையில் இது தான் மிகவும் பெரியது.

மர்மம் 02 :


மிகப்பெரிய படிக்கட்டுகள் போன்று காட்சி அளிக்கும் மெர்க்குரி கிரகத்தின் சரிவுகள் (Mercury scarps)..!
நான்கு ஆண்டு :
நாசாவின் மெசேன்ஜர் (MESSENGER) விண்கலம் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மெர்க்குரி கிரகத்தை சுற்றி ஆய்வு செய்து வருகிறது.
விளக்கம் :
இருந்தபோதிலும் கூட 1000 கிலோ மீட்டர்கள் மற்றும் 3000 மீட்டர் உயர மெர்க்குரி சரிவுகள் பற்றிய சரியான விளக்கம் இல்லை.

மர்மம் 03 :


செவ்வாய் கிரகத்தின் மர்மமான மேகம் போன்ற மண்டலங்கள்..!
மேகம் போன்ற மண்டலம் :
மார்ச் 2012-ஆம் ஆண்டு தெளிவாக பார்க்க முடியாத வண்ணம் தோன்றிய இந்த மேகம் போன்ற மண்டலமானது, ஏப்ரல் 2012-ஆம் ஆண்டு மிகவும் தெளிவாக காட்சியளித்தது.

தகவல் :


விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றை ஆராய்ந்து பார்த்த பின்தான், 1997-ஆம் ஆண்டிலும் ஒருமுறை இது போன்ற மண்டலம் தோன்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது, எனினும் இந்த மர்மமான செவ்வாய் கிரக மண்டலம் சார்ந்த தெளிவான தகவல் எதுவுமில்லை.

மர்மம் 04 :


பிப்ரவரி, 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்து, சுமார் 1200-க்கும் மேற்பட்டோர்களை காயப்படுத்திய மர்மமான எரி நட்சத்திரம்.
பிறப்பிடம் :
20 மீட்டர் அகலம் இருந்த அந்த எரி நட்சத்திரத்தின் பிறப்பிடம் எது என்று இன்றுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

மர்மம் 05 :


மிகவும் அசாத்தியமான, ப்ளூட்டோவின் சிறிய சூரிய குடும்பம்..!
ப்ளூட்டோவின் நிலவுகள் :
ப்ளூட்டோ கிரகம் மற்றும் அதன் 5 நிலவுகளும் சேர்ந்து ஒரு சிறிய சூரிய குடும்பம் போல காட்சி அளிக்கிறது. ப்ளூட்டோவின் நிலவுகள் எப்படி உருவானது என்பதில் தெளிவு இல்லை.

மர்மம் 06 :


ப்ளூட்டோ கிரகத்திற்கு பின்னால் இருப்பதாக நம்பப்படும் பிளானட் எக்ஸ் (Planet X)..!
ஒரு அங்கம் :
பிளானட் எக்ஸ் கிரகமானது நாம் வாழும் சூரிய குடும்பத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகம் :
தற்போது பூமியை விட பெரிய அளவில் இருக்கக்கூடிய பிளானட் எக்ஸ், பிளானட் வைய் (Planet Y) என ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

மர்மம் 06 :


விண்வெளியில் கேட்கும் மர்மமான சப்தங்கள்..! இதுவரை விண்வெளியில் பதிவு செய்யப்ப்பட்ட சப்தங்களில், 5 சப்தங்கள் மிகவும் மர்மமானவைகள் ஆகும்.

மர்மமான சப்தம் 01 :


சாட்டர்ன் கிரகத்தின் ரேடியோ கதிர் உமிழ்வு சப்தம் (Radio emissions from Saturn’s poles) – ஏப்ரல் 2002-ஆம் ஆண்டு நாசாவின் கஸ்ஸினி (Cassini) விண்கலம் இதை பதிவு செய்தது.

மர்மமான சப்தம் 02 :


சூரிய வெடிப்பு சப்தம் (Eruption on the Sun) – 2012-ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் ஐ (Voyager I) விண்கலம் இதை பதிவு செய்தது.

மர்மமான சப்தம் 03 :

காந்த சக்தி அலைவு சப்தம் (Oscillations in the magnetic field ) – வால் நட்சத்திரமான 67பி (Comet 67P)-யின் காந்த சக்தி அலைவு-வில் இருந்து பதிவு செய்யப்பட்ட சைலோபோன் இசை போன்ற சப்தம்..!

மர்மமான சப்தம் 04: 


ஜுப்பிட்டர் மின்னல்கள் சப்தம் – நாசாவின் வாயேஜர் (Voyager) விண்கலம் பதிவு செய்த ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்படும் பயங்கரமான மின்னல்களின் சப்தம்.


மர்மமான சப்தம் 05 :


பிளாக் ஹோல் உட்கொள்ளும் சப்தம் (feeding black hole) – மனித நாடித்துடிப்பை போன்றே, மேலும் கீழும் ஏறி இறங்கும்படியாக இருக்கும் பிளாக் ஹோல் சப்தம்
4.5 பில்லியன் ஆண்டுகளாய் ‘புதையுண்டு கிடந்த’ பூமி கிரக ரகசியம்.!

பல ஆண்டுகளாக மவுனம் காக்கும் நாசா.!?

No comments:

Post a Comment