Saturday 23 June 2018

ஆன்ராய்டு பற்றிய நீங்கள் அறியாத உண்மைகள்!!!!


தித்திக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள்                சுவாரஸ்ய தகவல்கள்


இன்னும் நம்மில் பலர் மார்ஷ்மல்லோ(Marshmallow) பதிப்பையே உபயோப்படுத்த துவங்கவில்லை, ஆனால் கூகுளோ தனது அடுத்த பதிப்பிற்கான பெயரை  தேர்ந்தெடுத்துவிட்டது.

  1. பொதுவாக ஆண்ட்ராய்டு பதிப்பின் பெயர்களை கூகுள் நிறுவனமே தேர்ந்தெடுக்கும்.
  2. ஆங்கில அகர வரிசையில் பெயரிடப்பட்டு வரும் இதன் பதிப்புகளில் புதிய வகையான N பதிப்பிற்கு மக்களிடமே கருத்துக்கணிப்பு நடந்தது.

இந்தியாவில் பலரும் ஒருமனதாக நெய்யப்பத்திற்கு வாக்களித்தனர், இருப்பினும் Nougat இனிப்பு வகை இறுதியில் வாகை சூடியிருக்கிறது. எனவே மக்களால் பெயரிடப்பட்ட முதல் ஆண்ட்ராய்டு பதிப்பாக இது வலம் வரும்.
இதுவரை Android-N என அறியப்பட்டு வந்த பதிப்புக்கு அதிகாரப்பூர்வ பெயராக Android-Nougat வழங்கப்பட்டது. முதலாவதாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட இப்பதிப்பு தற்போது Beta நிலைக்கு வந்துள்ளது, அதாவது வெளியிடுவதற்கான முந்தைய நிலை.
மேம்பட்ட அறிவித்தல்(Notifications),ஒரே நேரத்தில் இரு வகையான திரைகளை பயன்படுத்தும் வசதி (Multi-Window Support), மார்ஷ்மல்லோவில் இருப்பது போல Doze Mode வசதி போன்ற புதுமைகளோடுகோடையில் வெளியாக ஆயத்தமாக உள்ளது NouGet.
கூகுள் இப்படியாக இனிப்பு பண்டங்களின் பெயரை தனது இயங்குதளத்திற்கு வைப்பதை தனி முத்திரையாகவே மாற்றிவிட்டது. ஆனால் கூகிள் மட்டுமே அப்படி இல்லை. விண்டோஸ் நகரங்கள், இடங்கள் போன்றவற்றையும்(Microsoft Metro), ஆப்பிள் புலி இனங்களின் பெயரையும் பயன்படுத்தும்(Cheetah, Jaguar, Panther, Lion, etc.), ஆனால் பிரபலம் இல்லை.
இனி முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்புகளை பற்றி சற்று பார்ப்போம்.
  • A- Alpha(Nov 2007) – Astro Boy,Bender,R2-D2
  • B- Beta(Sep 2008)
  • C- Cupcake(Apr 2009)
  • D- Donut(Sep 2009)
  • E- Eclair(Oct 2009)
  • F- Froyo(May 2010)
  • G- Gingerbread(Dec 2010)
  • H- Honeycomb(Feb 2011)
  • I- Ice-cream Sandwitch(Oct 2011)
  • J- Jelly Bean(July 2012)
  • K- Kitkat(Oct 2013)
  • -but before Kitkat they were going to name it KeyLime Pi
  • L- Lollipop(Oct 2014)
  • M- Marshmellow(Sep 2015)
 Android 1.0
 ஆண்ட்ராய்டு பதிப்பு இனிப்பு உணவை பெயராக கொண்டிருக்கவில்லை. ஆல்பா(Alpha) எனப்பட்ட அந்த பாதிப்பு HTC Dream Heanset ல் வெளிவந்தது, அப்போது அளிக்கப்பட்ட பல வசதிகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளன.
எளிமையான தேடுபொறி மற்றும் Gmailவசதி, கூகிள் காலண்டர், Google Maps, YouTube மற்றும் Google Talk Messenger.
Android 1.1


ஒரு சில புதிய வசதிகளோடு பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் Beta பதிப்பு வெளியானது. ஏற்கனவே இருந்த வசதிகளில் முன்னேற்றம் செய்யப்பட்டது, Google Maps வியாபார தேடல்களை அளித்தது.
முதல் ஆண்ராய்டு செல்பேசி இப்போது இருப்பதிலிருந்து வெகுவாக வேறுபட்டிருந்தது.

Android 1.5 Cupcake

முதல் இனிப்பு வகையோடு துவங்கிய ஆண்ராய்டு பதிப்பு Cupcake தான். Widget முறை, அனிமேஷன் மாறுதல், திரையை திருப்பும் வசதி(Auto Rotate) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.

Android 1.6 Donut

இனிப்பு உணவு பெயர் புகழ் பெற்றதும் அப்படியே அதை ஆங்கில அகர வரிசையில் தொடர்ந்தது கூகிள். Donut நமக்கு திறன் வாய்ந்த தேடு முறையையும் Speed Dial நுட்பத்தையும் அளித்தது. மிக தெளிவான திரையை அப்போதைய 480×800 pixel தொலைபேசிக்கு வழங்கியது.

Android 2.0 Eclair

குறிப்பிட்ட சில முக்கியமான மேம்படுத்தலோடு வெளியானது Eclair, எனவே இது 2.0 வானது. இதன் அம்சமே Personalizations தான், அதாவது இடைமுகத்தை நமக்கு ஏற்றவாறு மாறிறிக்கொள்ளும் வசதி. Live wallpapers, ஒரே நேரத்தில் வெவ்வேறு செயலிகளுக்கு மாறும் முறையும் வந்தது.

Android 2.2 Froyo

நமது தொலைபேசியை தொடமலே பயன்படுத்த, குரல் தேடல் மற்றும் உள்ளீடுக்கான அனுமதியை வழங்கியது.மேலும் செயலிகளை மெமரி கார்டில் install செய்யவும் அனுமதித்தது.அப்போதைய 4gb நினைவுத்திறன் கொண்ட மொபைல்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாக இருந்தது.
உலகின் 100 கோடிக்கும் மேலான செல்பேசிகளில் ஆண்ராய்டு நிறுவப்பட்டுள்ளது.

Android 2.3 Gingerbread


செல்பி வந்தது இந்த பதிப்பில் தான்.பெயர் சொல்லக் கூடிய அளவிற்கு செயல்திறனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றியது.NFC, gyroscope மற்றும் barometer support கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் பிரபலமான ஆண்ராய்டு பதிப்பும் இதுதான்.

Android 3.0 Honeycomb

செல்பேசியில் பயன்படுத்தாத ஒரே ஆண்ராய்டு பதிப்பு Honeycomb மட்டுமே. காரணம் இப்பதிப்பு Tablet க்காகவே உருவாக்கப்பட்டது.Virtual keyboard போன்ற விஷயங்கள் பெரிய திரைக்கு ஏற்றவாறும் கட்டமைக்கப்பட்டது.

Android 4.0 Ice Cream Sandwich

2011 ல் வெளிவந்த இந்த வெர்ஷன் பார்க்கவும் பயன்படுத்தவும் ஒரு புது உணர்வை தந்தது.Quick swipe பயன்படுத்தி எல்லா செயலிகளையும் நிறுத்தலாம், 1080pவிடியோக்களை பதிவு செய்யலாம்.

Android 4.1 to 4.3 Jelly Bean

ஆண்ராய்டின் முதல் சிறந்த Responsiveமுகமை இதுவே. எனவே எல்லா வகையான தேவையையும் நம் திரைக்கு ஏற்றவாறு காண முடிந்தது.உள்ளுக்குள் தேடும் வசதியை அதிகரித்தது. நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள Android beamவழங்கப்பட்டது.
Android 4.4 Kitkat

கிட்கட் OK Google மூலம் குரல் வழி இணைய தேடல் google now வழியாக கொண்டுவந்தது மேலும் குறுஞ்செய்தி பராமரிப்பு, Emoji, பல பணிகளை ஒரே நேரத்தில் சிறப்பாக செய்து முடிக்க முடிந்தது.தற்போது உலகில் அதிகமானவர்களால் இந்த பதிப்பே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் போட்டியாளர்கள் அனைவரையும் விட அதிகபட்ச செயலிகளை(Apps) ஆண்ராய்டு கொண்டுள்ளது.

Android 5.0 Lollipop


லாலிபாப் (lollipop) 2014 இல் நம்மை சேர்ந்தது. கொஞ்சம் மாறுப்பட்ட இடைமுகம், பல பயணர்கள்( User, Guest) பயன்படுத்தும் வசதி வந்தது.எப்போதும் தொந்தரவு செய்யும் செய்திகளுக்கு புதிய Notification barமூலம் இடைவெளி அளித்தது.
Android 6.0 Marshmallow

கடந்த வருடம்(2015) வெளியானது. நல்ல பேட்டரி சேமிப்பு, Now on Tab நுட்பம், செயலிகளுக்கான அனுமதி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை தந்தது மற்றும் கைரேகை மூலம் Unlock செய்யும் முறை புதிதாக இணைந்தது.
ஒரு இந்திய இனிப்பு வகை ஆண்ராய்டு பதிப்பின் பெயராக மாற வெகுகாலம் இல்லை.

No comments:

Post a Comment