Tuesday 26 May 2020

ஸ்மார்ட் போன்களில் நாம் உண்மையென நம்பிக்கொண்டிருக்கும் பொய்யான தகவல்கள்(Myths about Smartphone)



 உலகம் முழுவதும் மொபைல் போனின் பயன்பாடு இன்றியமையாததாக மாறியுள்ளது. காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை, செய்தி, சமூக வலைதளம் என தினம் நூறுமுறை மொபைல் போனை நோட்டம் விடும் பழக்கம் நம்மில் பலருக்கு வந்துவிட்டது. இவ்வளவு பரவலாக மொபைல் பயன்பாடு இருக்கும் நேரத்தில், இன்னும் நம் மத்தியில் ஸ்மார்ட் போன்கள் பற்றி இருக்கும் சில தவறான நம்பிக்கைகளை இந்த பதிவில் பார்க்கலாம்....

பேட்டரியை இரவு முழுவதும் சார்ஜ் செய்யக் கூடாது: இது பொதுவாகவே எல்லோர் வீட்டிலும் இருக்கும் ஒரு கருத்து. ஆனால், தற்போதுள்ள ஸ்மார்ட்போன் உலகில், முழுவதும் சார்ஜான மொபைல்கள், சார்ஜருடன் இணைந்திருந்தால் கூட, தானாகவே மின் இணைப்பை துண்டித்துக் கொள்ளும் திறன் கொண்டவை.

பேட்டரியை சார்ஜ் செய்யும் முன் அதை முற்றிலும், அதாவது 0% வரை பயன்படுத்திவிட்டு பின் சார்ஜ் செய்தால், பேட்டரியின் ஆயுள் நீண்ட நாள் நிலைக்கும் என கூறுவதும் தவறு. பழைய பேட்டரிகளுக்கு இது உதவினாலும், தற்போது எல்லா போன்களிலும் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகள், அடிக்கடி செய்தாலே நீண்ட நாட்கள் நிலைக்கும்.

மொபைல் கம்பெனி வழங்கும் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என கூறுவது சுத்தப் பொய். தங்கள் நிறுவன பேட்டரிகளை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக மொபைல் நிறுவனங்கள் கிளப்பி விட்ட கட்டுக் கதை இது. அதற்காக மிகவும் மலிவான தரமில்லாத பேட்டரிகளை வாங்கக் கூடாது. அது மொபைலை நிச்சயம் பாதிக்கும். அதேநேரம், தரமான பேட்டரி சார்ஜர் நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றை உங்கள் மொபைல் நிறுவனம் வழங்கும் பேட்டரியை விட பாதி விலைக்கு பெறலாம். அவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பேக்கிரவுண்ட் ஆப்: மொபைலில் நாம் பயன்படுத்தி வரும் பல ஆப்கள் பின்னணியில் ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றை நீக்க பேட்டரி சேவிங் ஆப்கள் பல வந்துவிட்டன. ஆனால், நிஜத்தில் அவையெல்லாம் தேவையற்றவையே. பின்னணியில் ஓடும் ஆப்களை நம் மொபைலே, தானாக நிறுத்தி வைத்து விடும். அடிக்கடி பயன்படுத்தும் ஆப்களை திரும்ப திரும்ப க்ளோஸ் செய்து பின் மீண்டும் ஓபன் செய்வது தான் பேட்டரியை பாதிக்குமாம். இதுபோன்ற ஆப்கள் இல்லாமலே போன் சிறப்பாக செயல்படுவது தான் நிஜம்...

வைஃபை ஆன் செய்து வைத்திருந்தால் பேட்டரி சீக்கிரம் காலியாகிவிடும் என்பது மற்றொரு தவறான தகவல். நிஜத்தில், ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை பயன்படுத்தி, பைல்களை அனுப்பும்போதும், டவுன்லோட் செய்யும் போதும் மட்டுமே அவை பேட்டரியை பயன்படுத்துகின்றன. சாதாரணமாக அவை ஆன் செய்திருக்கும் போது, பேட்டரியை பயன்படுத்தாது.

மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் உடலை பாதிக்கும் என கூறுவதை இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. போனை சட்டை பாக்கெட்டில் வைத்தால் ஆபத்து என பலர் கூறுவதுண்டு. ஆனால், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் மொபைல் போன்கள் அனைத்துமே கதிர்வீச்சு சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டு, பாதுகாப்பானவை என சான்றிதழ் அளிக்கப்பட்ட பின் தான் விற்பனைக்கு வரும். செல்போன் டவர் கதிர்வீச்சை, மொபைல் போனுடன் ஒப்பிடக் கூடாது. அது தனி விவகாரம்...

இது எல்லோருக்கும் ஓரளவு தெரிந்த ஒன்று தான்... போன்களில் அதிக ரேம், கேமராவின் மெகாபிக்சல், ப்ராசசர் ஆகியவை இருந்தால், அவை சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு உதிரி பாகங்களை பயன்படுத்துவதால், அதன் பெர்பார்மன்ஸ் மாறுபடும். அதனால் தான், 8 மெகாபிக்சல் கொண்ட ஐபோனில் எடுக்கப்படும் படங்கள், 12 மெகாபிக்சல் கொண்ட சில ஆண்ட்ராய்டு போன்களை விட சிறப்பாக உள்ளன.

மொபைல் போனை விமானத்தில் பயன்படுத்தினால், விமானத்திற்கு வரும் சிக்கனலில் குளறுபடி ஏற்படும் என ஒரு வதந்தி உண்டு. அதனால் தான், சில விமானங்களில் போனை அணைத்து வைக்க சொல்வார்கள். ஆனால், தற்போதய விமானங்களில் உள்ள தொழில்நுட்ப கருவிகள் மிகவும் அதிநவீனமானவை. அதனால், மொபைலின் சிக்னல் அவற்றை பாதிக்கும் அளவு குறுக்கிடாது. எல்லோரும் மொபைலை ஒரே நேரம் பயன்படுத்தினால், சில நேரம் பைலட்களுக்கு சிறிய இடையூறு கொடுக்குமென்றாலும், எந்த வகையிலும் இது ஆபத்தானது இல்லை.

பெட்ரோல் பங்க்குகளில் மொபைலை பயன்படுத்தக் கூடாது என சொல்வதும் தவறான அணுகுமுறை தான். மொபைலால் பெட்ரோல் பங்க்குகளில் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுவது ஆதாரமில்லாத வதந்திதான். சில இடங்களில் பேட்டரிகள் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கும் சாதாரண மொபைல் பயன்பாட்டுக்கும் தொடர்பு கிடையாது.

8 ஜி.பி யோ, 32 ஜி.பி மொபைல் போன் ஸ்டோரெஜ் எவ்வளவு என்பது முக்கியமில்லை... எவ்வளவு இடத்தை ஃப்ரீயாக வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் மொபைல் போன் பர்ஃபாமன்ஸ் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதிலும் உண்மை இல்லை... ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கில் புதிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொன்றிலும் அதிக ஃப்ரீ ஸ்பேஸ் இருக்கிறது. அதற்காக அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது என்று கூறிவிட முடியுமா? என்ன மொபைல், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துதான் அதன் பார்ஃபாமன்ஸ் இருக்கும்

No comments:

Post a Comment