Wednesday 27 May 2020

லோகஸ்ட்டால் அடி மேல் அடி வாங்கும் இந்தியா(The locust starts to attack our nation)



டெல்லி: 26 ஆண்டுகளில் மிக மோசமான அளவிற்கு பயிர்களை லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தாக்கி வருவது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. கொரோனா பீதி ஒரு புறம் இருக்கும் நிலையில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Locust வெட்டுக்கிளிகள் என்பது என்ன தெரியுமா?
சோமாலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் லோகஸ்ட் என்ற ரக வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டன. தற்போது இவை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் படையெடுத்து வந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன.

வெட்டிக்கிளிகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து வருவது இந்த ஆண்டு இந்திய விவசாயத்திற்கு பெரும் அபாயம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை அளித்துள்ளது. தம்மாத்துண்டு பூச்சி உணவு உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என உங்கள் மனங்களில் எழுவது புரிகிறது.





வெட்டுக்கிளிகள்

சாதாரண வெட்டுக்கிளிகளை போல் அல்லாமல் லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் தனியாக வந்தால் பிரச்சினை இல்லை. ஒரு கூட்டமாக வந்துவிட்டால் அந்த இடத்தில் விவசாயமே செய்ய முடியாது. அந்த அளவுக்கு பயிர்களை சேதப்படுத்தும். மழை பெய்த பிறகு ஈரப்பதம் இருக்கும் இடங்களில் இவை ஈசல் போல் உற்பத்தியாகும் இந்த லோகஸ்ட் வெட்டுக்கிளிகள்.



பூச்சிகள்

அதிலும் ஆப்பிரிக்காவில் உற்பத்தியாகும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தான் மிகவும் ஆபத்தானவை. ஒரு சதுர கிலோமீட்டரில் கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் உருவாகும். இந்த வெட்டிக்கிளிகளின் ஆயுட்காலம் 6 மாதங்கள் மட்டுமே. உணவு உற்பத்தியை இந்த பூச்சிகள் அழித்ததால் உணவுக்கே பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.



இனப்பெருக்கம்

ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் இந்த பூச்சிகள் ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைகின்றன. வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்பை பொருத்தவரையில் லோகஸ்ட்கள் உலகில் பழமையான புலம்பெயர்ந்த பூச்சிகளாகும்.



பெரிய பூச்சிகள்

இந்த பூச்சிகள் சாதாரண வெட்டுக்கிளிகளிடம் இருந்து மாறுபட்டவை. இவை அதிக தூரத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும். இருப்பதிலேயே மோசமான வெட்டுக்கிளி என்றால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஒரு பெரிய பூச்சி அதன் எடைக்கேற்ப உணவை தினமும் உண்ணும் ஆற்றல் கொண்டது. ஒரு சிறிய சதுர கி.மீ. கொண்ட இடத்தில் 80 மில்லியன் பெரிய பூச்சிகள் இருக்கும்.


25 ஆண்டுகள்

இவை ஒரு நாளில் 35 ஆயிரம் மக்களின் உணவை உண்ணும். இவை 150 கி.மீ. தூரம் வரை தினமும் பறக்கும். இந்திய பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் புயல்களால் இந்திய- பாகிஸ்தான் எல்லையை நோக்கி வந்துள்ளன. எத்தியோபியா, சோமாலியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை அதிகரித்துள்ளது. இந்தியாவில் 26 ஆண்டுகளில் மிகப் பெரிய பயிர் தாக்குதல் தற்போது நடைபெறுகிறது. அதுபோல் கென்யாவில் 70 ஆண்டுகளில் தற்போது நடந்துள்ளது மிகப் பெரும் தாக்குதல் ஆகும்.


விவசாயிகள்

2.5 முதல் 3 கி.மீ. தூரம் கொண்ட பூச்சிகள் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளன. இவை எங்கு பச்சை பசேல் என காட்சியளிக்கிறதோ அங்கு செல்லும். இவற்றை அழிக்க தீயணைப்பு துறை தயார் நிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 33 மாவட்டங்களில் இந்த பூச்சிகள் படையெடுத்து வந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். ஏற்கெனவே கொரோனா பாதிப்பால் விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நலிந்துள்ள நிலையில் தற்போது இந்த பயிர் சேதம் விவசாயிகளை மேலும் கவலையடையச் செய்துள்ளது.

No comments:

Post a Comment