Monday 25 May 2020

ஆப்பிள் நிறுவனம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்(Some interesting facts about Apple)


Apple என்ற பெயர் வர காரணம் Steve Jobs இற்கு பிடித்த பழம் என்பது தான்.

Apple இன் கணினிகளை பயன்படுத்தும் போது புகைப்பிடித்தால், உத்திரவாதம் ரத்தாகிவிடும்.

Apple கம்பனியில் 100 000 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்.

அமெரிக்க திறைசேரியில் உள்ள பணத்தின் இரண்டு மடங்கு பணம் Apple இடம் உள்ளது.

iPod ஐ உருவாக்கிய Tony Fadell, தன்னுடைய iPod ஐ Real Networks மற்றும் Philips கம்பெனிகளுக்கு விற்க அணுகியபோது, அவை மறுத்து விட்டன. Apple வாங்கிக்கொண்டது.

1983 இல் Lisa என்ற பெயருடைய ஒரு தனியாள் கணினியை வெளியிட்டது Apple. ஆனால் அது தோல்வியடைந்தது. சுமார் 2,700 Lisa கணினிகள், Utah எனும் இடத்தில் எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

நியூட்டனின் ஆப்பிள் தான் முதல் Apple logo.

Apple இன் தலைமையகத்தில் வேலை செய்யும் ஒருவரின் சராசரி சம்பளம் வருடத்திற்கு 125 000 USD.

Apple iPad இல் பயன்படுத்தப்படும் Retina display, Samsung ஆல் உருவாக்கப்பட்டது.

208 780 000 ஐபோன்கள் 2018 இல் விற்கப்பட்டன

Apple பிரபலமடைந்திருக்காத காலத்தில், Apple ன் துணை நிறுவுனர் ஒருவர், தன்னிடமிருந்த Apple நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 800 டாலர்களிற்கு விற்றார். அதன் இன்றைய மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Siri யிடம் நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் Apple இற்கு அனுப்பப்பட்டு பிறகு சோதிக்கப்பட்டவுடன் மட்டுமே அதை செயல் படுத்துகிறது..

iPad என்ற பெயரின் உரிமத்தை Apple, 4 பில்லியன் USD இற்கு வாங்கியது.

2 comments: