Saturday, 19 January 2019

படித்தவுடன் பட பட வைக்கும் நிலவியல் செய்திகள்!!!!!


உங்களை அதிர வைக்கும் 19 நிலவியல் செய்திகள்



பலரும் நிலவியலை ஒரு சுவாரசியமான படிப்பாகக் கருதமாட்டார்கள்; ஆனால் படிக்க வேண்டிய முறையில் படித்தால் எல்லாமே உற்சாகம் ஊட்டக் கூடியவை தான். உதாரணத்துக்கு, நான் ஒரு தகவல் சொல்கிறேன் பாருங்களேன்.

நாம் எல்லாரும் பூமியின் உயரிய மலையாக எவரஸ்ட் சிகரத்தைக் கருதுகிறோம்; ஒரு விதத்தில் அது உண்மையாக இருந்தாலும் அதை வேறு விதமாகக் கூடப் பார்க்கலாம். கடல் மட்டத்திலிருந்து மிக உயரிய மலை எதுவென்று கேட்டால், ஹவாயின் கியா சிகரம் தான் அதற்குப் பதிலாக இருக்கும். சொல்லப்போனால், கடல் மட்டத்திலிருந்து கியா சிகரம் எவரஸ்ட்டை விட 4,436 அடி உயரமாக இருக்கிறது. பூமத்திய ரேகையைச் சுற்றிய பகுதிகளில் பூமி சற்று குண்டாக இருப்பது தான்  இதற்குக் காரணம்.

இதைப் போல் மேலும் சில சுவாரசியமான தகவல்களைக் கீழே காணலாம் :


1) இறந்த கடல் வருடந்தோறும் 1 மீட்டர் உயரம் தாழ்ந்து கொண்டே போகிறது; தற்போது அது கடல் மட்டத்திலிருந்து 429 மீட்டர் கீழே இருக்கிறது.


2) ஆஸ்திரேலியாவில் ஒரு வேலி 3.500 மைல் நீளத்துக்குச் செல்கிறதாம். நேப்பாளத்துடனான இந்திய எல்லையை விட அது இருமடங்கு நீளமாகும்.


3) ரஷ்யாவில் மட்டுமே 11 நேர மண்டலங்கள் இருக்கின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால், அந்நாட்டின் மேற்கு முனையில் காலை 7 மணியாக இருக்கையில், அதன் கிழக்கு முனையில் மாலை 6 மணியாக இருக்கமாம்.

4) வங்காளதேசத்தை விட ரஷ்யா 115 மடங்கு பெரிதாக இருந்தாலும், ரஷ்யாவை விட வங்காளதேசத்தின் மக்கள் தொகை 1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.


5) நம் சூரியக் குடும்பத்தின் உறுப்பினராக இருந்த புளூட்டோவை விட ரஷ்யாவின் நிலப்பரப்பு அதிகமாகும்.


6) 1811 – 1812 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, ரிக்டர் அளவுகோலில் எட்டிற்கும் மேலாகப் பதிவான 3 நிலநடுக்கங்களால், மிஸ்ஸிஸிப்பி ஆறு தலை கீழாகத் திசை மாறிப் பாயத் தொடங்கியதாம்.


7) நாம் அன்றாடம் இரவில் ரசிக்கும் நிலவை விட ஆஸ்திரேலியா அகலமானதாம். ஆம், அது உண்மை தான். நிலா 2,100 மைல் குறுக்களவைக் கொண்டிருக்கையில், ஆஸ்திரேலியா மட்டுமே 2,485 மைல்கள் அகலமானதாகும்.



8) இந்தியா, சீனா மற்றும் மேலும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தான், உலகின் பாதி மக்கள் வாழகின்றனர்.



9) பிடசோவா ஆற்றில் இருக்கும் பெஸண்ட் எனும் சிறிய தீவு, வருடத்தில் 6 மாதங்களுக்கு ஸ்பெயினின் அங்கமாகவும் , இதர 6 மாதங்களுக்குப் பிரான்ஸின் அங்கமாகவும் இருக்கிறது. அந்தத் தீவில் தங்க எவருக்கும் அனுமதியில்லை என்றாலும், தன் நாட்டின் அங்கமாக இருக்கையில் இரு நாட்டினர்க்கும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க அனுமதி உண்டு.



10) உலகப் பிரசித்திப் பெற்ற மிகப் பெரிய அமேசான் ஆற்றின் குறுக்கே எந்தப் பாலமும் இல்லையாம்; அப்படியெனில் அந்த ஆற்றின் போக்கின் பலம் எவ்வளவு பலமாக இருக்கும் என சிந்தித்துப் பாருங்களேன்!



11) நியூசிலாந்திலுள்ள ஒரு மலைக்கு 85 ஆங்கில  எழுத்துகள் கொண்ட பெயரை வைத்துள்ளனர்; அது தான் உலகிலேயே மலைக்கு அளிக்கப்பட்ட நீண்ட பெயராகும்.

“Taumatawhakatangihangak oauauotamateaturipukaka pikimaungahoronukupokaiwhe nua kitanatahu” தான் அதன் பெயர்.


12) “A” தான் உலகில் ஓர் இடத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகச் சின்ன பெயராகும். ஸ்கான்டாவேனியன் மொழியில் “A”  என்றால் ஆறு என்று பொருளாம். இந்தப் பெயர் வித்தியாசமாக இருப்பதால், இதைக் கொண்ட வழிகாட்டு அட்டைகளையெல்லாம் மக்கள் அடிக்கடித் திருடி வருகின்றனர்.



13) 1.3 சதுரக் கிலோமீட்டர் கொண்ட ஹான்ஸ் தீவின் மீது  கனடாவும் டென்மார்க்கும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்; இரு நாடுகளும் அத்தீவுக்கு உரிமைக் கோர வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.


கனடாவைச் சேர்ந்த கப்பற்குழுவினர் இத்தீவில் இறங்கினால், தீவில் நட்டப்பட்டிருக்கும் டென்மார்க் கொடியை அகற்றி விட்டு , கனடாவின் கொடியை நட்டு வைப்பர். பின், சில மது புட்டல்களையும் விட்டுச் செல்வர். இதே போல் தான், டென்மார்க்கைச் சேர்ந்தோர் இங்கு வந்து இறங்கினால், கனடா நாட்டுக் கொடியை அகற்றி விட்டு டென்மார்க்கின் கொடியை நடுவர்; பின் கனடா நாட்டவர்களுக்குச் சில மது புட்டில்களையும் விட்டுச் செல்வர்.


என்னே புதுமையான முறையில் போட்டிப் போடுகிறார்கள் பாருங்களேன்!



14) ஜப்பானின் தலைநகரின்  முந்தையப் பெயர், கியோட்டோ . அந்தப் பெயரின் எழுத்துகளை மாற்றித் தான், இப்போது டோக்கியோ என வழங்குகின்றோம்.



15) சீனாவில் இருக்கும் எர் வாங்க் டாங் எனும் குகையின் அளவைக் கண்டு நீங்கள் பிரம்மிப்படைவீர்கள்; அதன் பிரம்மாண்டத்தால், அதற்கெனத் தனியாக ஒரு வானிலையே இருக்கிறதாம்.



16) இத்தாலிக்குள்ளேயே, வாட்டிக்கன் சிட்டி மற்றும் சென் மரினோ என இரண்டு தனி நாடுகள் அடங்கி இருக்கின்றன.



17) பெரும்பாலும் ஐக்கிய ராஜ்ஜியமும் இங்கிலாந்தும் ஒன்றெனக் கருதுகின்றனர்; ஆனால், உண்மையில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளும் சேர்ந்தது தான், ஐக்கிய ராஜ்ஜியம்.

18) ஒரு காலத்தில், உலகில் ஒரே ஒரு நிலப்பரப்பு தான் இருந்தது; அதற்குப் பாங்கெய்யா என்று பெயர். அதைச் சுற்றியிருந்த பெரும் நீர் நிலைக்குப் பாந்தலஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது.


19)தே போல், இந்தியா ஒரு சமயத்தில் ஆசியாவின் அங்கமாக இல்லாமல் இந்தியப் பெருங்கடலில் தனியாக இருந்தது. பின், காலம் போகப் போக, அந்தப் பெரிய நிலப்பரப்பு ஆசிய நிலப்பரப்புடன் மோதி இணைந்தது. இந்த மோதலால் உருவானது தான், இமய மலைத் தொடர்கள்.



Friday, 18 January 2019

உலகில் உள்ள வித்தியாசமான விமான ஓடுதளங்கள்(Run Way)

உலகில் உள்ள வித்தியாசமான விமான ஓடுதளங்கள்(Run Way)

விமானப்பயணம் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். அதிலும் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்பவர்கள், அந்த  அனுபவத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.


விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறீர்கள்.  அங்கே விமான ஓடுதளத்திற்கு பதிலாக ஒரு கடற்கரையோ, ஒரு ரயில்வே ட்ராக்கோ இருந்தால் எப்படி இருக்கும். அப்படியான கிலி ஏற்படுத்தும் டாப் 5 விமான நிலையங்களுக்கு ஒரு ட்ரிப் அடிப்போமா..


1. பாரா ஏர்போர்ட் ( ஸ்காட்லாண்ட்) :


ஸ்காட்லாந்தின்  பாரா என்ற குட்டி தீவில் அமைந்திருக்கிறது இந்த கடற்கரை விமான நிலையம்.1936 ஆம் ஆண்டிலிருந்து  இந்த விமானசேவை இயங்கி வருகிறது. உலகிலேயே கடற்கரையை  விமான  ஓடுதளமாக பயன்படுத்துவது இங்கு மட்டும் தான். வருடத்திற்கு 10,000 பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். கடற்கரையில் உருவாகும் அலைகளின் அளவை பொறுத்தே விமானத்தை லேண்டிங் செய்யவோ, டேக் ஆஃப் செய்யவோ முடியும். இயற்கை ஒத்துழைப்பில்லையென்றால் ”சாரி பாஸ்!” என்று அறிவித்துவிட்டு ரிட்டர்ன் அடித்துவிடுவார்கள்.  உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாராவில் லேண்ட் ஆகலாம்.

2. பில்லி பிஷப் டொரெண்டோ சிட்டி ஏர்போர்ட் (கனடா):


கனடாவின் டொரெண்டோ நகரில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமான நிலையம் அமைந்திருப்பதே ஓர் ஏரிக்கு நடுவில்..! டொரெண்டோ நகரின் ஒன்டேரியோ ஏரியின் நடுவில் இந்த விமான நிலையத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சுற்றிலும் ஏரி நடுவில் விமான ஓடுதளம் என பில்லி பிஷப் விமான தளத்தில் தரையிறங்குவது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். கனடாவின் பரபரப்பான விமான நிலையங்களில் இந்த விமான நிலையமும் ஒன்று.

3. ஜிஸ்பார்ன் ஏர்போர்ட் (நியூசிலாந்து):


விமானம் தரையிறங்கப்போகிறது சீட்பெல்ட்டை அணிந்து கொள்ளவும் என பைலட் சொன்னதும் கொஞ்சம் ஜன்னல் வழியே எட்டி பார்த்தால். நிச்சயமாக கொஞ்சம் திகில் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நீங்கள் எட்டிப் பார்க்கும்போது ரன்வேயில் ரயில் ஓடிக் கொண்டிருக்கலாம்.  வருடத்திற்கு 150,0000 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். மற்ற விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்குவது பைலட்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.ஆனால் இங்கே ரயில்வே, விமான நேரங்களை கையாளும் சவால் விமான நிலைய அதிகாரிகளுக்கு தான் காத்திருக்கிறது.
 
4. அகத்தி விமான தளம் (லட்ச தீவுகள்,இந்தியா):


விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி  விமான தளத்தின் ஹைலைட். இந்தியாவின்  லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம்.1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று. 

5.ஜிப்ரால்டர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்  (ஜிப்ரால்டர்):


விமான ஓடுதளம் ஆரம்பிக்கும் இடத்தில் சிறிது தொலைவிற்கு இரண்டு பக்கமும் தண்ணீர். அதை தாண்டி ஓடுதளத்தை ஒட்டி பக்கவாட்டில் ஒரு மலை. மலையை கடந்ததும் ஒரு சாலையை குறுக்காக கடந்தால்  ஜிப்ரால்டர் விமான நிலையம் உங்களை வரவேற்கும். என்ன... டோரா பயணம் போல தண்ணீர், மலை, சாலை என நீள்கிறதா?

இதுதான் இந்த விமான நிலையத்தின் ஸ்பெஷல். தினமும் மூன்று விமானங்கள் இந்தப் பாதையில் இயக்கப்படுவதோடு வாரத்திற்கு மூன்று முறை மான்செஸ்டரிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான ஓடுதளத்தின் நடுவே செல்லும் சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பினாலோ, நிலையத்தை வந்தடைய
வேண்டுமென்றாலோ வாகனங்கள் நிறுத்தப்படும். நம் ஊரில் ரயில்வே க்ராஸிங்கை கடப்பது போல, கடக்கலாம் என்று முயற்சித்தால் சட்னிதான் பாஸ்!



Tuesday, 15 January 2019

மாட்டுப் பொங்கலும்,ஜல்லிக்கட்டும்!!!!

மாட்டுப் பொங்கலும்,ஜல்லிக்கட்டும்!!!!





தமிழனின் தமிழர் திருநாளான பொங்கல் வரலாறு பகுதி-1

 தமிழனின் தமிழர் திருநாளான பொங்கல் வரலாறு பகுதி-1


பொங்கல் பண்டிகையின் வரலாறு

பொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் பழமை வாய்ந்த பண்டிகைகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, இது தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகை சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 காலகட்டத்தில் கொண்ட துவங்கப்பட்டது. பொங்கல் என்பது புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகை என கூறப்பட்டாலும், இந்த பண்டிகை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்கு பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றி பார்க்கலாம்.

பொங்கல் வரலாறு

சங்க காலத்தின் போது கொண்டாடிய சில கொண்டாட்டங்களே, இன்றைய பொங்கலாக நாம் கொண்டாடி வருகிறோம். சங்ககால கொண்டாட்டத்தில், தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரத முறையை பின்பற்றினர். பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக இருந்தது. தமிழ் மாதமான மார்கழியின் போது இதை கொண்டாடினார்கள். நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டும் என பெண்கள் வேண்டுதல்கள் வைப்பார்களாம்.

இந்த மாதத்தில் பால் பொருட்களை தவிர்த்து, தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து, மண்ணால் செய்த விநாயகரை வணங்குவார்களாம். தை மாதத்தின் முதல் நாள் வரை அவர்களின் விரதத்தை தொடர்வார்கள். இந்த வழக்கமே தற்போது பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருப்பாவை மற்றும் திருவெம்பாவை

தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையின் போது குலோத்துங்கன் என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலைத்தை பரிசாக அளிப்பார் என்பதை திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புராணக்கதைகள்

பொங்கல் பண்டிகையுடன் சில புராணக்கதைகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது.

சிவபெருமானின் சாபம்

புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம் தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால் நந்தியோ, தவறுதலாக, தினமும் உணவு உண்ணவும் மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார். அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு.

கிருஷ்ணர்

இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்து வந்த இந்திர தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர தேவனை வணங்க வேண்டாம் என கூறினார். இதனால் கோபம் கொண்ட இந்திர தேவன், புயல் மழையை உண்டாக்க மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார் இந்திர பகவான்.

பொங்கல் கொண்டாட்டங்கள்

இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் உருக்கமான அறுவடை திருவிழாவாகும். பொங்கல் தினத்தன்று நெற்கதிர்களை அறுப்பதற்கு முன்பு கடவுளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படும். தங்களின் ஏர் கலப்பை மற்றும் நெல் அறுக்கும் அரிவாள்கள், சந்தன குப்பி ஆகியவற்றை வைத்து சூரியனையும், பூமியையும் விவசாயிகள் வணங்கிடுவார்கள். கடவுள் முன் வணங்கப்பட்ட கருவிகளை கொண்டு தான் நெற்கதிர்களை அறுவடை செய்வார்கள்.


நாளை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இதன் பகுதி-2 வெளியிடப்படும்..
      மாட்டுப் பொங்கலும்,ஜல்லிக்கட்டும்

Monday, 14 January 2019

படிப்பவரை குலை நடுங்கவைக்கும் சைக்கோக்கள் பகுதி-2

படிப்பவரை குலை நடுங்கவைக்கும் சைக்கோக்கள் பகுதி-2



ஏமி ஆர்ச்சர் கிலிகன்

சீரியல் கில்லர் வரலாற்றில் ஏகப்பட்ட பெண்களும் இடம்பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்ச்சர். 1868–ல் அமெரிக்காவில் பிறந்தவர். வயதானவர்களைப் பராமரிக்கிறேன் என ஒரு இல்லத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரது முதல் இரண்டு கணவர்களும் இறந்து போயிருந்தனர்.

இவருடைய முதியோர் இல்லத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்து விட்டு சட்டென இறந்து விடுவார்கள். சில ஆண்டுகளில் மக்களுக்கு இந்த இல்லத்தின் மீது சந்தேகம் வர, புகார்கள் பறந்தன. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வந்தன. சுமார் 50 பேர் வரை இவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த புலன் விசாரணை சொன்னது. அவர்களில் இவருடைய கணவர்களும் அடக்கம். எல்லோருக்கும் விஷம் கொடுத்து சமாதியாக்கியிருந்தார் ஆர்ச்சர்.

வரும் பணக்கார முதியவர்களிடம் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்க வேண்டியது, விஷம் கொடுத்து அவர்களைத் தீர்த்துக் கட்டவேண்டியது. இது தான் அவருடைய பதறடிக்கும் ஃபார்முலா!

ஜெஃப்ரி டாமர்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு அப்பாவி முகம். இவனுடைய டார்கெட் பெண்களல்ல, ஆண்கள். ஓரினச் சேர்க்கை கொலையாளி இவன். ஆண்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களைக் கொல்வான். பின் அவர்களுடைய உறுப்புகளை வெட்டி எடுத்து உணவுக்காக பத்திரப்படுத்துவான். நரமாமிச சைக்கோ இவன்.

18 வயதில் முதல் கொலையை அரங்கேற்றியவன்,அதன் பிறகு நிப்பாட்டவே  இல்லை. குறைந்தது 17 பேரைக் கொன்றிருக்கலாம் என்று கணக்கிட்டாலும், அதை விட மிக அதிகம் என்பது போலீஸ் தரப்பு நம்பிக்கை. இவனுடைய வீட்டில் சோதனையிட்டபோது வீட்டில் இருந்த மனித உறுப்புகளைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர் காவல் துறையினர்.

1994 நவம்பர் 28–ந் தேதி ஜெயிலில் நடந்த ஒரு சண்டையில் இறந்து போனான்.

பேலா கிஸ்

ஹங்கேரியாவின் சீரியல் கில்லர் இவன். வீட்டைச் சுற்றி நிறைய உலோக டிரம்ஸ் வைத்திருப்பது இவனுடைய வழக்கம். ‘இது என்ன இவ்வளவு பெரிய பாத்திரங்கள்?’ என யாராவது கேட்டால், ‘எரிபொருள் நிரப்பி வைக்கிறேன்’ எனச் சொல்வான். மக்களுக்கு இவனுடைய பாத்திரங்கள் மேல் ஏதோ ஒரு சந்தேகம்.

கடைசியில் போலீஸ் வந்தது. உலோக டிரம் ஒன்றை திறந்து பார்த்தபோது, உள்ளே பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இருந்தது. மொத்தம் 24 உடல்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டன. 74 பெண்கள் வரை இவன் கொன்றிருக்கலாம் என விசாரணை சொன்னது. போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பி ஓடிய இவன், கடைசிவரை பிடிபடவே இல்லை.

அந்தேரி சிக்காட்டிலோ

ரஷிய நாட்டைச் சேர்ந்த தொடர் கொலையாளி. 1936–ம் ஆண்டு பிறந்தவன். ரெட் ரிப்பர் என்பது இவனுடைய பிரபலமான பெயர்களில் ஒன்று. 1978–க்கும் 1990–க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவன் கொன்று குவித்த பெண்கள் மற்றும்  குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 55.

நல்ல மனநிலையில் இவன் படுகொலைகளை அரங்கேற்றியதாக டாக்டர் சான்றிதழ் கொடுத்தார். அரசு இவனுக்கு மரண தண்டனை விதித்தது. கருணையே இன்றி மக்களைக் கொன்று குவித்த இவன் ரஷிய சுப்ரீம் கோர்ட்டில் கருணை மனு அளித்தான். அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி போரிஸ் எல்ஸ்டினிடம் கருணை மனு அளித்தான். அதுவும் நிராகரிக்கப்பட 1994–ல் கொல்லப்பட்டான்.

ஹார்ப்   சகோதரர்கள்

மிக்காயா ஹார்ப், ஜாஸ்வா ஹார்ப் இருவரும் சகோதரர்கள். 1770 –களில் வாழ்ந்த அமெரிக்காவின் முதல் சீரியல் கில்லர்கள். பல படுகொலைகளை செய்தவர்கள் கடைசியில் பிடிபட்டார்கள். 39 பேரை கொலை செய்ததாக ஹார்ப் ஒத்துக் கொண்டான். ஆனால் குறைந்த பட்சம் 50 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்கிறது காவல்துறை.

கொடூரமாகக் கொலை செய்து தண்ணீரில் போட்டு விடுவது இவர்கள் வழக்கம். இவர்களில் மூத்தவன், தனது பச்சைக் குழந்தை அழுகிறது என எரிச்சல்பட்டு அதை மரத்தில் தூக்கி அடித்துக் கொன்றவன். இவனுடைய கொடூரத்தை விளக்க இது ஒன்றே போதும்.

Sunday, 13 January 2019

உலகை உலுக்கிய சைக்கோக்கள் பகுதி-1



உலகை உலுக்கிய சைக்கோக்கள் பகுதி-1



மனிதத்தின் சுவடே இல்லாத சிலரும் இந்த உலகில் உலவத்தான் செய்கின்றனர். சமூகத்தின் சாபக்கேடான அத்தகைய மனிதர்களில் சிலர் இதோ.


எட்வர்ட் கெயின்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், தான் உண்டு தன் பண்ணை வீடு உண்டு என்று வசித்து வந்தார் எட்வர்ட் கெயின். ஒருநாள் உள்ளூர் ஹார்ட்வேர்ஸ் கடையில் ஒரு திருட்டு. பொருளோடு, கடையின் உரிமையாளரான ‘பெர்னிஸ் வோர்டன்’ என்ற பெண்ணும் மிஸ்ஸிங். இந்த வழக்கில் துப்பு துலக்கி வந்த போலீசார், எதற்கும் சும்மா விசாரித்து வைப்போமே என எட்வர்ட்கெயின் பண்ணை வீட்டிற்குச் சென்றனர். அங்கு கண்ட காட்சி, அவர்களை குலை நடுங்க வைத்துவிட்டது. காணாமல் போயிருந்த பெண் தலையில்லாமல் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தாள். இது நடந்தது 1957–ம் ஆண்டு நவம்பர் 16–ந் தேதி.  

திக்.. திக்.. அத்துடன் தீரவில்லை. அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். வித்தியாசமாய் தெரிந்த அவன் சாப்பிடும் தட்டு ஒரு மண்டை ஓடு!  உட்காரும் ஷோபாவின் லெதர் மனித தோல்! குப்பைத் தொட்டியில் போட்டிருந்த கவரும் மனித தோல்!  பக்கத்தில் தொங்கிய பெல்ட்டில், நான்கு மனித 
மூக்குகள்! 

ரசிக்க ரசிக்க மனிதர்களை கொன்று குவித்திருக்கிறான் அந்த சைக்கோ. மனநல மருத்துவ மனையில் போடப்பட்ட அவன், 1984 ஜூலை 26–ல் இறந்தான். இவன்தான் ஹாலிவுட்டின் சைக்கோ படங்களுக்கான இன்ஸ்பரேஷன்!

டெட் பண்டி  

பார்வைக்கு செம ஸ்மார்ட்டான இவனும் ஒரு சைக்கோ கில்லர்தான். இவனது டார்கெட் முழுக்க முழுக்க பெண்கள். இளம் பெண்களை வசீகரமாகப் பேசி மயக்குவான். மயங்கியவர் களை காரில் தூக்கிப் போட்டு தலையில் அடித்துக் கொன்று, பின்னர் பலாத்காரம் செய்வான். பெண் சைக்காலஜியில் இவன் கெட்டிக் காரன். சிலரிடம் ரொமாண்டிக்காக பேசுவான், சிலரிடம் அப்பாவியாக பேசுவான், சிலரிடம் உதவி கேட்பான், சிலரிடம் போலீஸ் என்பான்! இப்படி ஏகப்பட்ட ஐடியாக்கள் வைத்திருந்தான். 1974–க்கும் 78–க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவன் கொன்று குவித்த பெண்களின் எண்ணிக்கை முப்பது! 

சின்ன வயதில் இவனை வளர்த்த தாத்தாவும் சைக்கோ டைப் தான். மிருகங்களை துன்புறுத்துவது, தவறான படங்களை ரசிப்பது என அவரது பழக்கம் இவனையும் பற்றிக்கொண்டது. 1984 ஜனவரி 24–ல் மின்சார நாற்காலியில் வைத்து சாகடிக்கப்பட்டான். ஹாலிவுட்டில் வெளியான ‘டெட் பண்டி’ எனும் படம் இவனைப் பற்றியது தான்!  

ஆல்பர்ட் பிஷ் 

குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ இவன். குழந்தைகளைத் துன்புறுத்தி அவர்களோடு பாலியல் உறவு கொள்வது இவனது ஹாபி. முதலிலெல்லாம் கொலை செய்யவில்லை. குழந்தைகளைக் கடத்தி அவர்களை படாத பாடுபடுத்தி பின்னர் விட்டு விடுவான். நாளாக ஆக அதில் அவனுக்கு ‘கிக்’ கிடைக்கவில்லை. பிறகு கொலை செய்தால் தான் பாலியலில் திருப்தி எனும் நிலைக்கும் வந்து விட்டான். 

அறிவியல் இவனது மனநோயை, ‘சேடோமேசோசிஸ்ட்’ என்று அழைக்கிறது. அதாவது வலி இருந்தால் தான் இவனுக்குத் ‘திருப்தி’ கிடைக்கும். ஆள் கிடைக்காத போது ஊசியால் தனது உடலையே குத்திக் கொள்வான், தீயால் சுட்டுக் கொள்வான். இதுவும் கூட அவனுக்கு இன்பம் தருமாம்.  

டேவிட் ரே பார்க்கர்

அணு அணுவாக சித்திரவதை செய்து ரசிக்கும் மாபெரும் சைக்கோ இவன். குறைந்தபட்சம் 60 பேரையாவது கொன்றிருப்பான் என்பது போலீஸ் கணக்கு. ஆனால் அதெல்லாம் ஜுஜூபி என்கின்றனர். விளையாட்டுப் பெட்டி என்று ஒரு பெட்டி வைத்திருந்தான். அது ஒரு மரணப் பெட்டி. அதில் ஆணி, சங்கிலி, வாள், கம்பி போன்ற ஆயுதங்கள் இருக்கும். 

ஆட்களைப் பிடித்து வந்து, அவர்களைக் கட்டி வைத்து சித்திரவதை செய்வான். உடலைப் பிய்த்தும், கிழித்தும் நடத்தும் சித்திரவதையை, நேரடி ஒளிபரப்பு செய்வான். ‘யாருக்கு?’ என்கிறீர்களா... சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கு. புதிது புதிதாய் ஆயுதங்களை உருவாக்கி, ஏதோ முட்டைகோஸ் வெட்டுவது போல மனிதனை 
வெட்டுவான். மாரடைப்பால் இறந்து போனான், இந்த இதயமே இல்லாதவன். 

கில்லீஸ் டே ரெய்ஸ்

1405 செப்டம்பரில் பிறந்த இவன்.. படுபாதகன் எனும் பெயரைச் சம்பாதித்தவன். பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து உயர் பதவியை அடைந்தான். சின்னப் பிள்ளைகளைப் பிடித்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, சற்றும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன்.

இவன் கொன்ற சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இடத்தில் கிடைத்த எலும்புக் கூடுகள் மட்டும் 40 என்பது பதைபதைக்க வைக்கிறது. சிறுவர்களை ஏமாற்றி அழகிய உடை கொடுத்து, உணவு கொடுத்து பின் சொல்ல முடியாத கொடுமைகள் செய்து அவர்களைக் கொன்று விடுவான். இவனது சில வேலைக்காரர்களும் இந்த படுபாதகத்துக்கு உடந்தை. 35–வது வயதில் அவனை பிடித்து, மரண தண்டனை விதித்தார்கள்.